scorecardresearch

வெளிநாடுகளில் படிக்க வேண்டுமா ? ஊக்கத்தொகை அளிக்கும் நாடுகள் இவைதான்

மேலை நாடுகளில் உள்ள சிறந்த உயரக்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும்போது  நீங்கள் பெறக்கூடிய சிறந்த உதவித்தொகை வாய்ப்புகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

வெளிநாடுகளில் படிக்க வேண்டுமா ? ஊக்கத்தொகை அளிக்கும் நாடுகள் இவைதான்

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள், உயர்தர கல்வியைப் பெறுவது மட்டுமல்லாமல், புதிய அனுபவம்,மொழி,  கலாச்சாரம், சவால்களை சந்திக்கின்றனர். இந்த வகையான சர்வதேச வெளிப்பாடு உலகளாவிய தலைவராக வளர அவர்களுக்கு உதவுகிறது. சத்யா நாதெல்லா, இந்திர நூயி, சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில்  உயரக் கல்வி பெற்றவர்களே.

இருப்பினும், இந்தியாவில் பல திறமையான மாணவர்கள் வெளிநாடுகளில் ஏற்படும் அன்றாட செலவு மற்றும் கல்விக் கட்டணத்தை நிர்வகிப்பது கடினம் என்று கருதி வருகின்றனர். இதனால் நிதிச்சுமையை பெருமளவில்  குறைக்கும் கல்வி ஊக்கத் தொகை குறித்த தகவல்கள் அவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

மேலை நாடுகளில் உள்ள சிறந்த உயரக்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும்போது  நீங்கள் பெறக்கூடிய சிறந்த உதவித்தொகை வாய்ப்புகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

அமெரிக்கா : 

அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட கல்வி கற்பித்தல் ஆகியவற்றின் காரணமாக சர்வதேச மாணவர்களுக்கு வெளிநாடுகளில் செல்ல விரும்பும் இடமாக அமெரிக்கா திகழ்கிறது. கூடுதலாக, நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரம் STEM இல் திறமையான மாணவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

எமோரி பல்கலைக்கழக தேவை அடிப்படையிலான உதவித்தொகை, ஹார்வர்ட் பல்கலைக்கழக உதவித்தொகை இந்த லிஸ்டில் அடங்கும்.

வெளிநாடுகளில் மேற்படிப்பு : நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

 

இங்கிலாந்து : 

இங்கிலாந்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிந்தைய படிப்பு வேலை விசா அறிவிப்பு சர்வதேச மாணவர்களுக்கு கூடுதல் நன்மையாக இருக்கிறது. இதன் மூலம் படிப்பை முடித்து  விட்டு, 2 வருடங்கள் இங்கிலாந்தில் தங்கி வேலை வாய்ப்புகளைத் தேட இதன் மூலம் அனுமதி கிடைக்கின்றது.

இங்கிலாந்தில் படிக்க சிறந்த உதவித்தொகை பட்டியல் இங்கே முடிவதில்லை. கேட்ஸ் கேம்பிரிட்ஜ் உதவித்தொகை மற்றும் ரோட்ஸ் உதவித்தொகை போன்ற பல்வேறு பல்கலைக்கழக-குறிப்பிட்ட உதவித்தொகைகளும் முறையே

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற நாட்டின் உயர்க் கல்வி நிறுவனங்கள் முறையே  கேட்ஸ் கேம்பிரிட்ஜ் உதவித்தொகை மற்றும் ரோட்ஸ் உதவித்தொகையை வழங்குகின்றன.

மேலும்,மாணவர்கள் EURAXESS UK  என்ற திட்டத்தின் மூலம் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி நிலை படிப்பிற்கான ஏராளமான உதவித்தொகை வாய்ப்புகளையும் பெறமுடியும்.

 


ஆஸ்திரேலியா :

உலகின் முதல் 100 பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் 8 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும்  ஏராளமான சர்வதேச மாணவர்களை ஈர்க்கிறது.

பிரான்ஸ் : 

பிரான்ஸ் நாட்டில் ஒரு வருடத்திற்கு மட்டும்  500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு 7.1 கோடி மதிப்புள்ள உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைகளை பிரெஞ்சு தூதரகம் மற்றும் இதர பிரெஞ்சு நிறுவனங்கள் திறமையான  இந்திய மாணவர்களுக்கு வழங்குகின்றன.

பிரெஞ்சு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதுநிலை மற்றும் பிஎச்டி மட்டத்தில் உள்ள மாணவர்களுக்கும் பல உதவித்தொகைகள் உள்ளன. யுனிவர்சைட் பாரிஸ் சாக்லே ஐடெக்ஸ் உதவித்தொகை, எமிலி பாட்மி உதவித்தொகை, ஈபிள் எக்ஸலன்ஸ் ஸ்காலர்ஷிப் திட்டம் மற்றும் எகோல் நார்மல் சூப்பரியூர் டி லியோன் பல்கலைக்கழக உதவித்தொகை போன்றவைகள் இதில் அடங்கும்.

ஜெர்மனி

பொதுவாக, குறைவான பல்கலைக்கழக கல்விக் கட்டணங்களுக்கு பெயர் போன ஜெர்மனி நாட்டில்,  சர்வதேச மாணவர்களுக்கு பல உதவித்தொகைகளும்  வழங்கப்படுகிறது.

 

இந்த கட்டுரை ஆங்கிலத்தில் படிக்க http://இங்கே கிளிக் செய்யவும்

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Top scholarship opportunities that international students can avail in different countries

Best of Express