தமிழ்நாட்டில் விரைவில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளநிலையில், மாணவர்கள் பலரும் கலந்தாய்வுக்கு போகத் தயாராக உள்ளனர். அவர்கள் நல்ல கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு டாப் 10 கல்லூரிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் மத்தியில் மீண்டும் பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் எழத் தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16முதல் அக்டோபர் 14ஆம் தேதிவரை நடத்தப்பட உள்ளது.
இதனால், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கலந்தாய்வுக்காக காத்திருக்கும் மாணவர்கள், எந்த கல்லூரியில் சேர்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சில தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளில் ஸ்காலர்ஷிப் தருவதாகக் கூறி அதிக கட் ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட தரம் குறைந்த கல்லூரிகளில் சேர்கிறார்கள். ஆனால், டாப் கல்லூரிகளிலும் உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண் அதிகம் இருந்தால் அங்கேயும் ஸ்காலர்ஷி தருகிறார்கள். அதனால், மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருக்கும்போது டாப் கல்லூரிகளை தேர்வு செய்து படியுங்கள்.
பொறியில் படிப்பு, பொறியியல் கல்லூரிகள், பொறியியல் கலந்தாய்வு பற்றி மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் அஷ்வின் தனதுயூடியூப் சேனலில் தமிழ்நாட்டில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலைத் தெரிவித்துள்ளார். அதில் அஷ்வின் குறிப்பிட்டுள்ள டாப் 10 கல்லூரிக்ளின் பட்டியலை கீழே தருகிறோம்.
1.யுனிவர்சிட்டி டிபார்ட்மெண்ட்ஸ் ஆஃப் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, சிஇஜி வளாகம், சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை, கவுன்சிலிங் கோட் - 0001
2.யுனிவர்சிட்டி டிபார்ட்மெண்ட்ச் ஆஃப் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - எம்ஐடி வளாகம், குரோம்பேட்டை, தாம்பரம், கவுன்சிலிங் கோட் - 0004
3.ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் (தன்னாட்சி), காலவாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை, செங்கல்பட்டு மாவட்டம், கவுன்சிலிங் கோட் - 1315
4.சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சி.இ.சி.ஆர்.ஐ) காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், கவுன்சிலிங் கோட் - 5012
5.பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி (தன்னாட்சி), பீலமேடு, கோயம்புத்தூர் மாவட்டம், கவுன்சிலிங் கோட் - 2006
6.தியாகராஜ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் (தன்னாட்சி), (அரசு நிதியுதவி பெறும் கல்லூரி) மதுரை, கவுன்சிலிங் கோட் - 5008
7.கொயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, (தன்னாட்சி), சிவில் ஏரோட்ரோம் போஸ்ட், கோயம்புத்தூர், கவுன்சிலிங் கோட் - 2007
8.யுனிவர்சிட்டி டிபார்ட்மெண்ட்ஸ் ஆஃப் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, ஏசிடி வளாகம், சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை. கவுன்சிலிங் கோட் - 0002
9.சென்னை இன்ஸ்டிடியூ ஆஃப் டெக்னாலஜி, (தன்னாட்சி) கல்லூரி, குன்றத்தூர், சென்னை. கவுன்சிலிங் கோட் - 1399
10.பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலதி அண்ட் அப்ளையிட் ரிசர்ச் கல்லூரி, அவினாசி சாலை, நீலாம்பூர், கோயம்புத்தூர். கவுன்சிலிங் கோட் - 2377
பொறியியல் கல்வி மற்றும் பொறியியல் படிக்க வேண்டும் என்ற இலக்கு கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் அஷ்வின் இந்த கல்லூரிகளைத்தான் டாப் 10 கல்லூரிகள் என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.