/tamil-ie/media/media_files/uploads/2019/05/z676.jpg)
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.65 துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் இணைய தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உள்பட 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.