இடைநிலை ஆசிரியர் தேர்வு; விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மீண்டும் வாய்ப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; விண்ணப்பத்தில் மீண்டும் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; விண்ணப்பத்தில் மீண்டும் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பு

author-image
WebDesk
New Update
trb1

2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் ஏப்ரல் 30-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தவறான விவரங்களை குறிப்பிட்டதாகவும், தற்போது அதை சரிசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்குமாறும் சில தேர்வர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

இதனைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களில் எவரேனும் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்களை அளித்திருந்தால் அதை சரிசெய்வதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. திருத்தம் கோருவதற்கான கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை கோரிக்கைக்குரிய ஆதார சான்றிதழ்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைதீர் மின்னஞ்சலுக்கு (trbgrievances@tn.gov.in) மே 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் செயல்படும் குறைதீர் பிரிவிலும் நேரடியாகவும் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம். மே 8-ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trb Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: