TRB PG Assistant Exam : நீங்கள் பதில் அளித்த விடைகளை, பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு
தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும்(Your Questions and Responses) http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
trb pG eXAM – question paper and response sheet download from trb website
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குனர் நிலை I க்கான தேர்வுகள் கடந்த 27-09-2019, 28-09-2019 மற்றும் 29-09-2019 ஆகிய தேதிகளில் தமிழகமெங்கும் உள்ள 30 மாவட்டங்களில் சுமார் 154 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகளை விரைவாகவும் , துரிதமாகவும் வெளியிட கணினி மூலம் இத்தேர்வை நடத்தி இருந்தது ஆசரியர் தேர்வு வாரியம்.
இந்நிலையில், இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் (Your Questions and Responses) யூசர் ஐடி மற்றும் கடவுசொல்லை பயன்படுத்தி http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
தேர்வுக்கான விடைத் தாள் ( ஆன்சர் கீ ) விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட விடைத் தாளில் ஏதேனும் ஆட்சேபனைகளை இருந்தால், பதில் விடையை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த செயல்முறைக்குப் பிறகு, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான முடிவை வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியானப் பிறகு, சான்றிதல் சரிபார்க்கும் பணி நடைபெறும்.