ஆசிரியர் தேர்வு வாரியம், 1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனம் நடைபெறாமல் இருந்த நிலையில், 1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
அதே போல, பல ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வான, டெட் தேர்வு தாள் I, தாள் II தேர்வுகள் ஜூலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்கள் பணியில் 200 பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள் 139 காலி பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அரசு சட்டக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளில் 56 காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீட்டால் தேர்வுக்கு தயாராகி எதிர்பார்த்திருக்கும் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“