தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2025
Post Graduate Assistant
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Post Graduate Degree மற்றும் Bachelor of Education (B.Ed.,) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 36900 – 116600
Physical Director Grade – I
கல்வித் தகுதி: Bachelor of Physical Education (B.P.Ed.) or Bachelor of Physical Education (BPE) or Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education and Degree in Sports படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 36900 – 116600
Computer Instructor Grade – I
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Post Graduate Degree மற்றும் Bachelor of Education (B.Ed.,) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 36900 – 116600
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 53 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளுக்கு ரூ.300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.