முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு - டி.ஆர்.பி முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN TRB Exam Free Coaching Classes in Ramanathapuram Tamil News

கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Advertisment

நேற்று (ஜூலை 11, 2025) வெளியிடப்பட்ட தேர்வு அறிவிக்கையில், இத்தேர்வு செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் பாடத்திற்கு 216 பேர், ஆங்கிலம்-197, கணிதம்-232, இயற்பியல்-233, வேதியியல்-217, தாவரவியல்-147, விலங்கியல்-131, வணிகவியல்-198, பொருளியல்-169, வரலாறு-68, புவியியல்-15, அரசியல் அறிவியல்-14, கணினி பயிற்றுனர் நிலை 1-57, உடற்கல்வி இயக்குனர் நிலை 1-102 பேர் தேர்வு செய்யப்பட இருந்தனர்.

கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய ஆகஸ்ட் 13 முதல் 16-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்களை tnbgrievancc@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

தேர்வு ஒத்திவைப்பு காரணம்:

Advertisment
Advertisements

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை எண். 02/2025 (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 10.07.2025 அன்று வெளியிடப்பட்டு, இப்பணியிடங்களுக்கான தேர்வு நாள் 28.09.2025 என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அதே நாளில் (செப்டம்பர் 28, 2025) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Combined Civil Services Examination - II (Group II and II-A Services) தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதால், முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: