/indian-express-tamil/media/media_files/OOx1I7Bs9Z31ubhPqx8V.jpg)
TRB Notifications October 25th, 2023
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.36,400 முதல் 1,15,700 வரை வழங்கப்படும்.
இத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.
பணியிடங்கள்
தமிழ் – 394
ஆங்கிலம் – 252
கணிதம் – 233
இயற்பியல் – 293
வேதியியல் – 290
தாவரவியல் – 131
விலங்கியல் – 132
வரலாறு – 391
புவியியல் - 106
தகுதியானோர் https://www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ ஆசிரியர் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் 2024 ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.