Advertisment

TRB PG Assistant Exam: கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆசிரியர் தேர்வு வாரியம்

அனைத்து மையங்களிலும் கேமராக்கள் பொருத்தியும், மேற்பார்வை குழுவையும் அமைத்தும் தேர்வு தொடர்பான முறைகேடுகளை தவிர்க்க  ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி செய்து வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trb Pg assistant exam: exam-hall-rules-dress-code-trb-pg-exam-important-information

trb Pg assistant exam: exam-hall-rules-dress-code-trb-pg-exam-important-information

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குனர் நிலை I க்கான தேர்வுகள் வருகின்ற 27-09-2019, 28-09-2019 மற்றும் 29-09-2019 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் தமிழகமெங்கும் 30 மாவட்டங்களில் சுமார் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.  கணினி மூலம் தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிவுகளை விரைவாகவும் , துரிதமாகவும் வெளியிட முடியும் என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் நம்புகிறது. ஆறு வாரத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Advertisment

வேட்பாளர்கள் தங்கள் அட்மிட் கார்டை //trb.tn.nic.in என்ற வலைத்தளத்தில் பதிவு இறக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எழுதும் இத்தேர்வில்  பெருவிரல் கைரேகையை பதிவு செய்த பின்பு தான் தேர்வர்கள் மையத்துற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அனைத்து மையங்களிலும் கேமராக்கள் பொருத்தியும், மேற்பார்வை குழுவையும் அமைத்தும் தேர்வு தொடர்பான முறைகேடுகளை தவிர்க்க  ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி செய்து வருகிறது.

கால்குலேட்டர், பதிவு அட்டவணைகள்,

பேஜர், டிஜிட்டல் டைரி, புத்தகங்கள், மின்னணு உபகரணங்கள் போன்ற என்ற மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு வர முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் 'ஹை ஹீல்ஸ்' அணிவதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆண்கள் அரக்கை சட்டை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வர்களுக்கு கணினி வழித் தேர்வுகளில் முன் அனுபவம் எற்படுத்துகின்ற வகையில், கடந்த 17-ம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் 'பய்ற்சித் தேர்வுகள்' (practice test) நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வு எழுதும் தேர்வர்கள் இதனை பயன்படுத்தி வரவிருக்கும் தேர்வுகளை வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment