/indian-express-tamil/media/media_files/plC0FPZ8ppyWHogHwNJn.jpg)
முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) மற்றும் கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வின் நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இன்று (செப்டம்பர் 30) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஜூலை 10 அன்று வெளியிட்ட அறிவிக்கை எண் 02/2025-ன்படி, இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டன.
காலிப் பணியிடங்கள்: 1,996
விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: 2,36,530 பேர்
எழுத்துத் தேர்வு நாள்: அக்டோபர் 12, 2025
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 பணியிடங்களுக்கான தேர்வெழுத விண்ணப்பித்த 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் இன்று (30.09.2025) முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான https://www.trb.tn.gov.in/ என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்குத் தங்களது பதிவு எண் (Register Number) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்குக் கடைசி நேரத்தில் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்கும் நோக்குடன், ஹால் டிக்கெட் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.