தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வை வருகின்ற ஜூலை 21 ஆம் தேதி நடத்துகிறது. முன்னதாக இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு மார்ச் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் தேர்வு 23.06.2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 21.07.2024 அன்று இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதனை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
இடைநிலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.trb.tn.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
வலது புறத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் என்ற பொத்தானை அழுத்தவும்.
இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
இப்போது திரையில் இடைநிலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“