இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் கூடுதலாக 1000 இடங்களைச் சேர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் தொடக்கக் கல்வித்துறையில் 2023-24 ஆம் ஆண்டு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களால் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1000 இடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
2023 - 2024 ஆம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிவிக்கை எண்: 01/2024, நாள்: 09.02.2024 அன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை (ADDENDUM) அறிவிக்கை எண் 01: A / 2024, நாள்: 16.07.2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (website: https://www.trb.tn.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் 2768 ஆக அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“