Advertisment

மேலும் 1000 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: ஜூலை 21 தேர்வுக்கு ரெடியா? ஹால் டிக்கெட் டவுன்லோட் பண்ணுங்க!

இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு; காலியிடங்களை 2768 ஆக உயர்த்தி ஆசிரியர் தேர்வு வாரியம்; ஜூலை 21 ஆம் தேதிக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

author-image
WebDesk
New Update
TRB-TET exam

இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி? காலியிடங்கள் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது? உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

ஆசிரியர் தேர்வு வாரியம் தொடக்கக் கல்வித்துறையில் 2023-24 ஆம் ஆண்டு ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களால் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1000 இடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

2023 - 2024 ஆம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிவிக்கை எண்: 01/2024, நாள்: 09.02.2024 அன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை (ADDENDUM) அறிவிக்கை எண் 01: A / 2024, நாள்: 16.07.2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (website: https://www.trb.tn.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

இத்தேர்வில் கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு, பிற பாடங்கள் அடங்கிய எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை இருக்கும். 

ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

படி 1: trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்

படி 2: முகப்புப் பக்கத்தில் ஆசிரியர் அனுமதி அட்டை 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

படி 4: ஹால் டிக்கெட்டை சரிபார்த்து பதிவிறக்கவும்

படி 5: எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “தேர்வுதாரர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் எந்த தேர்வரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trb Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment