/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-13T112741.594.jpg)
tamilnadu 4 core subject stream retained
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் -319 பணியிடங்கள்
ஆங்கிலம் - 223 பணியிடங்கள்
கணிதம் - 279 பணியிடங்கள்
இயற்பியல் - 210 பணியிடங்கள்
வேதியியல் - 356 பணியிடங்கள்
தாவரவியல் -154 பணியிடங்கள்
விலங்கியல் - 144 பணியிடங்கள்
வரலாறு - 104 பணியிடங்கள்
புவியியல் -11 பணியிடங்கள்
பொருளாதாரம் -211 பணியிடங்கள்
வணிகவியல் -99 பணியிடங்கள்
அரசியல் அறிவியல் -14 பணியிடங்கள்
உடற்கல்வியியல் - 16 பணியிடங்கள்
உயிர்வேதியியல் -1 பணியிடம்
நுண்ணுயிரியியல் -1 பணியிடம்
மனையியல் -1 பணியிடம்
இந்திய பண்பாடு-1 பணியிடம்
மொத்தம் -2144 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதுகுறித்த அதிக தகவல்களுக்கு http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
ஆன்லைன் முறையில் இந்த தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us