Advertisment

TNTET 2019: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் முதல் நாளே இந்தக் குளறுபடியா?

TNTET 2019 Apply Online @trb.tn.nic.in: இன்று இரவு 11 மணி முதல் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என திடீரென புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TET Exam

TET Exam

TNTET 2019 Application Form; Apply Online @trb.tn.nic.in: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இன்று முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என முன்பே குறிப்பிடப்பட்டிருந்து. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக, இன்று காலை முதலே ஆன்லைனில் குவிந்தனர் விண்ணப்பதாரர்கள்.

TNTET 2019 Application Form, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 TNTET 2019 Application Form: apply online @trb.tn.nic.in

TRB Exam: TNTET 2019 Apply Online @trb.tn.nic.in- தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2019

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவு செய்ய  முயற்சித்தபோது பதிவு செய்ய முடியாமல் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். காரணம் என்னவென்று அலசியபோது, இன்று இரவு 11 மணி முதல் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என திடீரென புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இதனால் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தவிர, தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Jobs Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment