scorecardresearch

TNTET Exam: டெட் நியமனத் தேர்வில் வயது வரம்பு சலுகை கிடைக்குமா? லேட்டஸ்ட் அப்டேட்

ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் நியமனத் தேர்வு; அரசாணை 149 ரத்து அல்லது வயது வரம்பு சலுகை; அமைச்சர் தெரிவித்தது என்ன?

trb
TRB-TET

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் நியமனத் தேர்வில் அரசாணை 149 ரத்து அல்லது வயது வரம்பு சலுகை குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கு, டெட் தேர்வில் தகுதி பெற்று பின்னர் நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய முறை அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசாணை 149 வெளியிடப்பட்டது. இதற்கு ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருந்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: EPFO நிறுவனத்தில் 2859 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்தநிலையில், டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தேர்வர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து அரசாணை 149 ரத்து அல்லது வயது வரம்பு சலுகை தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அதாவது அரசாணை 149 ஐ ரத்துச் செய்ய வேண்டும் அல்லது வயது வரம்பில் சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் வயது வரம்பு சலுகை அல்லது அரசாணை ரத்து இரண்டில் ஏதேனும் ஒன்றை வழங்க பரிசீலிக்கப்படும் என உறுதியாக தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Trb tntet exam aspirants request age relaxation