Advertisment

TET Exam; ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள்; ஆன்லைனில் பயிற்சி செய்வது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, இரண்டாம் தாள்; டைம் மேனேஜ்மெண்ட் செய்வது எப்படி? ஆன்லைனில் பயிற்சி செய்ய இணைப்பு இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trb

TRB-TET

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், மாதிரித் தேர்வுகளை ஆன்லைனில் பயிற்சி செய்வது எப்படி? நேர மேலாண்மையை கடைபிடிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக விரும்புபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: பட்ஜெட் 2023: கல்விக்கான ஒதுக்கீடு ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்வு; கடந்த ஆண்டை விட 8.3% அதிகம்

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு 2022 மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்வு, 2023 ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும்.

இதற்கான பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.

மாதிரி தேர்வு எழுதுவது எப்படி?

முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://trb.tn.nic.in/Default.htm என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கு Tamilnadu Teacher Eligibility Test (TNTET)-Paper-II – 2022 – Practice Test for Paper-II என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் வேறு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு கடைசியில் குறிப்பிடப்பட்ட check boxஐ கிளிக் பின்னர், Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தில் Start Test என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதேநேரம் http://trbpracticetest.onlineapplicationform.org/TET/NewSyllabusSummarySet1.htm?selectedLanguage= என்ற இணைப்பை கிளிக் செய்து நேரடியாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் பக்கத்திற்குச் செல்லலாம்.

தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு

முதலில் நீங்கள் தேர்வை தொடங்கும் முன், கொடுக்கப்பட்டுள்ள உங்கள் சுயவிவரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிப்பார்த்துக் கொள்ளவும். நீங்கள் ஏற்கனவே ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுதியிருந்தால், உங்களுக்கு பெரிதாக பிரச்சனை இருக்காது. ஏனெனில் பேனா மற்றும் பேப்பர் தேர்வு போல் அல்லாமல் ஆன்லைன் தேர்வு மாறுபட்டு இருக்கும்.

ஆன்லைன் தேர்வில் ஒரு நேரத்தில் ஒரு கேள்வி மட்டுமே திரையில் காண்பிக்கப்படும். மேலும் நீங்கள் தேர்வை தொடங்கிய உடன் கடிகாரம் ஓட ஆரம்பித்து விடும். எனவே ஒரு கேள்விக்கு அதிக நேரம் எடுக்காமல் இருக்க வேண்டும். மேலும், அந்த கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால், அடுத்த கேள்விக்கு நகர வேண்டும். அதேநேரம், சந்தேகம் உள்ள கேள்விக்கு, விடைகளை குறித்தோ, அல்லது குறிப்பிடாமலோ, மறுமுறை பார்க்கும் வகையில் செய்யலாம். அதாவது ஆன்லைன் தேர்வில், தேர்வு முடியும் வரை எந்தக் கேள்விக்கும் விடைகளை நீங்கள் மாற்றலாம். எனவே சந்தேகமாக உள்ள கேள்விகளை குறியிட்டு வைத்துக் கொள்வது நல்லது.

மேலும், நீங்கள் விடையளித்துள்ள வினாக்கள் பச்சை நிறத்திலும், விடையளிக்காத வினாக்கள் சிவப்பு நிறத்திலும், குறித்து வைத்த வினாக்கள் ஊதா நிறத்திலும், வினா எண்களோடு திரையின் ஓரத்தில் காண்பிக்கப்படும். நீங்கள் நேரடியாக வினா எண்களை தேர்வு செய்து விடையளிக்கலாம், விடைகளை மாற்றலாம்.

எனவே, இதற்கெல்லாம் ஏற்றாற்போல், நீங்கள் நேர மேலாண்மையை கடைபிடிப்பது நல்லது. ஆதலால், ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்ப்பது சிறந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment