/indian-express-tamil/media/media_files/9G20QIIXoF7q00ylggs7.jpg)
ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகளின் அடிப்படையில் தேர்வானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
TRB Exam UGTRB Result 2024: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், வட்டார வள மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் காலிப் பணியிடங்கள் 2222ல் புதிய நபர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பின்னர் 360 கூடுதல் பணியிடங்களின் சேர்க்கை குறித்த பட்டியலைகடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில், மேலும் 610 கூடுதல் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெள்ளிக்கிழமை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் 234 இடங்களும், பின்னடைவு பணியிடங்கள் 25, பற்றாக்குறை பணியிடங்கள்213, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் தற்போதைய காலிப்பணியிடங்கள் 2ம் உள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 136 பணியிடங்கள் உள்ளன. இது குறித்த பட்டியல்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.
பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப கூடுதலாக 610 இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட நிலையில், தற்போது அதற்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் தகுதி தேர்வு மற்றும் மெயின் தேர்வு என ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் முடிவுகளை பார்க்கலாம்.
இந்த முடிவுகளின் அடிப்படையில் தேர்வானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.