தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), நிறுவனத்தில் இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருச்சி பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
FTA Gr II (Engineer - Quality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Engineering / Technology in Mechanical/ Production/ Metallurgy படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 84,000
FTA Gr III (Supervisor - Quality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: Diploma in Mechanical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 45,000
வயது தகுதி: 01.05.2025 அன்று 22 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.bhel.in/index.jsp என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Sr. Manager / HR - IR & Rectt., HR department, 24 Building, BHEL, Thiruverumbur, Tiruchirappalli – 620014.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.