திருச்சி மாவட்டத்திலுள்ள பெண் வேலை நாடுநர்களை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 06.09.2024 மற்றும் 07.09.2024 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு (B.A., B.SC., B.COM., B.B.A.,) கல்வித் தகுதிகளையுடைய 19 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஓராண்டு முன் அனுபவம் உள்ள பெண் வேலை நாடுநர்கள் தங்களின் சுய விவரக்குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தேர்வு செய்யப்படும் பெண் வேலைநாடுநர்களுக்கு மாதம் ரூபாய் 19,629 நிதி உதவியுடன் 15 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். மேலும், இப்பயிற்சி காலத்தில் உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வசதி வழங்கப்படும்.
இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1500க்கும் மேற்பட்ட பெண் வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளதால், பெண் வேலை நாடுநர்கள் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சி மாவட்ட பெண் வேலை நாடுநர்கள் திரளாக இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“