மார்ச் 21-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; வேலை தேடுபவர்கள் பங்கேற்க திருச்சி ஆட்சியர் அழைப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை (மார்ச் 21) நடத்தவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 

Advertisment

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலை வாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைநாடுநர்கள் 21.03.2025 அன்று வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 ரூ 94990-55902 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

Jobs Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: