/indian-express-tamil/media/media_files/2025/05/10/7B9XU8uY6DEdYzPWhBik.jpg)
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான, இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் க. அங்கம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியின் இ-சேவை மையத்தில் உள்ள சேர்க்கை உதவி (AFC) மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க கல்லூரியில் உதவி மையம் (Help Desk) செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணிப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.