அரசு மருத்துவமனையில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; விவரங்கள் இதோ…

Trichy Government hospital invites application for various posts: திருச்சி அரசு மருத்துவமனையில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, மது மீட்பு மையம் மற்றும் நுண்ணுயிரியல் துறை உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களில் காலியிடங்கள் நிரப்படவுள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

டிரோமா ரெஜிஸ்ட்ரி அசிஸ்டெண்ட்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : ரூ.10,000

அவசர சிகிச்சைப் பிரிவு செயலர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : ரூ.20,000

அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

சம்பளம் : ரூ.15,000

மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய உளவியலாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : ரூ.13,000

மது மீட்பு சிகிச்சை மைய உளவியலாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

சம்பளம் : ரூ.18,000

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 03

சம்பளம் : ரூ.10,000

சமூகப் பணியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

சம்பளம் : ரூ.18,000

ஆய்வக ஆராய்ச்சி உதவியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

சம்பளம் : ரூ.40,000

ஆய்வக உதவியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : ரூ.6,500

மருத்துவமனைப் பணியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 04

சம்பளம் : ரூ.5,000

தூய்மைப் பணியாளர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 04

சம்பளம் : ரூ.5,000

காவலர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02

சம்பளம் : ரூ.6,300

மேற்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு உரிய கல்வி தகுதியை உடையவர்கள், அக்டோபர் 20 ஆம் தேதி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும், நேரடி கலந்தாய்வில் கலந்துக் கொள்ளலாம்.

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களுக்கு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி தகவல் பலகை மற்றும் இணையதள பக்கத்தில் பார்வையிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trichy government hospital invites application for various posts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express