தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25 தொழில் பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
Botany – 5
Biotechnology – 5
Food Processing and Preservation - 4
B.C.A – 2
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 9,000
Technician (Diploma) Apprentices
மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 8
Agriculture/ Horticulture – 7
Nursery Management and Ornamental Gardening – 2
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 8,000
வயது தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் தேடுதல் தளத்தில் ICAR NATIONAL RESEARCH CENTRE FOR BANANA AUTHORITY என பதிவிட்டு, கிடைப்பெறும் இணைப்பில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nrcb.icar.gov.in/documents/Recruitment/2023/November/apprentice.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“