திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 11 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 11 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
icar nrcb jobs

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 11 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

Chemistry – 2

Biotechnology – 2

Computer Science - 1

Advertisment

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.Sc படிப்பு படித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை: ரூ. 9,000

Diploma (Technician) Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

Computer Science – 1

Agriculture/ Horticulture - 5

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை: ரூ. 8,000

வயது தகுதி: 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

Advertisment
Advertisements

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nrcb.icar.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: