பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வு ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தான். ஜே.இ.இ தேர்வு எழுதும் மாணவர்களின் குறிக்கோள் ஐ.ஐ.டி அல்லது என்.ஐ.டி.,யில் இடம் பெற வேண்டும் என்பது தான்.
தமிழகத்தில் இந்தியாவிலேயே பொறியியல் படிப்புகளில் நம்பர் 1 நிறுவனமான ஐ.ஐ.டி தான் ஜே.இ.இ தேர்வு எழுதும் டாப்பர்களின் முதல் தேர்வு. அடுத்தப்படியாக பல்வேறு இடங்களில் உள்ள ஐ.ஐ.டி.,கள் மாணவர்களின் விருப்பமாக இருக்கும். இப்படி ஐ,ஐ.டி.,களுக்கு இடையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு என்.ஐ.டி மட்டுமே உள்ளது. அந்த என்.ஐ.டி நம் தமிழகத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்: கேம்பஸ் இண்டர்வியூ-வில் அசத்தும் ஐ.ஐ.டி மெட்ராஸ்; கோடிகளில் சம்பளம் பெறும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள்
திருச்சியில் உள்ள என்.ஐ.டி (NIT Trichy) தான் தமிழகம் மற்றும் இந்திய அளவில், என்.ஐ.டி.,களில் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் முதல் தேர்வு.
இந்தநிலையில், திருச்சி என்.ஐ.டி.,யில் எந்ததெந்த பாடப்பிரிவுக்கு, எந்ததெந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் 2023 ஆம் ஆண்டில் இடம் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் முழுமையாக விளக்கியுள்ளார்.
அதன்படி, திருச்சி என்.ஐ.டி.,யில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2023ல் OC பிரிவு ஆண்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
CSE – 99.3751035
ECE – 99.0374231
EEE – 98.7335328
Mechanical – 98.4499608
Instrumentation and Control – 98.0371912
Chemical – 97.3340032
Production – 97.0026171
Civil – 96.25084.20
Metallurgy – 96.1375457
2023ல் OC பிரிவு பெண்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
CSE – 99.1757860
ECE – 98.3799512
EEE – 97.9307413
Mechanical – 97.1452865
Instrumentation and Control – 96.8813702
Chemical – 96.6299319
Civil – 96.0169613
Metallurgy – 95.5930388
Production – 94.9692466
2023ல் OBC பிரிவு ஆண்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
CSE – 99.2717410
ECE – 98.4144562
EEE – 98.2114321
Mechanical – 97.3464365
Instrumentation and Control – 97.1156702
Chemical – 96.0212657
Production – 95.9274064
Metallurgy – 95.0411334
Civil – 94.9005819
2023ல் OBC பிரிவு பெண்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
CSE – 99.1163948
ECE – 98.6205148
EEE – 97.9624024
Mechanical – 97.2869444
Instrumentation and Control – 97.1883126
Production – 95.2537683
Civil – 95.1724820
Chemical – 93.4643713
Metallurgy – 92.4929604
2023ல் SC பிரிவுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
CSE – 98.0117311
ECE – 96.9241563
EEE – 95.9321649
Mechanical – 93.1954723
Instrumentation and Control – 92.6543281
Chemical – 89.0864657
Production – 82.1275344
Metallurgy – 86.2310371
Civil – 88.1342312
இதில் பெண்களுக்கு 3 மதிப்பெண்கள் குறைவாக வரும்.
EWS பிரிவுனருக்கு ஓ.பி.சி பிரிவை விட 2 மதிப்பெண்கள் குறைவாக வரும், ST பிரிவுக்கு எஸ்.சி.,யை விட 6 மதிப்பெண்கள் வரை குறைவாக வரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.