திருச்சி என்.ஐ.டி வேலைவாய்ப்பு; மாதம் ரூ. 50,000 சம்பளம்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி என்.ஐ.டியில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் உடனே அப்ளை பண்ணுங்க!

Trichy NIT invites application for faculty positions: திருச்சி என்.ஐ.டியில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில், திருச்சி என்.ஐ.டி வளாகம் ஒன்பதாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க விரும்பவர்களின் முக்கிய விருப்பம் திருச்சி என்.ஐ.டி ஆகும். தற்போது இந்த முன்னனி கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2022

விரிவுரையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை – 22

துறை வாரியான காலியிடங்களின் விவரம்

Architecture – 3

Civil Engineering – 6

Computer Science & Engineering – 4

Computer Applications – 5

Humanities & Social Sciences – 1

Metallurgical & Materials Engineering – 3

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி SC/ST/OBC (Non-Creamy Layer)/PwD பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் (Ph.D. in the relevant / equivalent discipline) பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 50,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruitment.nitt.edu/tmpfac22/  என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி,

The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2022

விண்ணப்ப படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 19.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruitment.nitt.edu/tmpfac22/advt/TF-2022-Advertisement%20new%20final.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trichy nit invites application for faculty positions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express