திருச்சி என்.ஐ.டியில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில், திருச்சி என்.ஐ.டி (NIT) வளாகம் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க விரும்பவர்களின் முக்கிய விருப்பம் திருச்சி என்.ஐ.டி ஆகும். தற்போது இந்த முன்னணி கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2022
இதையும் படியுங்கள்: Repco Bank Jobs: ரெப்கோ வங்கி கிளர்க் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
SENIOR RESEARCH FELLOW
காலியிடங்களின் எண்ணிக்கை – 2
கல்வித் தகுதி: M.E/M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,000
JUNIOR RESEARCH FELLOW
காலியிடங்களின் எண்ணிக்கை – 2
கல்வித் தகுதி: M.E/M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 31,000
TECHNICAL ASSISTANT
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி: B.E/B.Tech in Mechanical/ Metallurgical and Material Science படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 21,600
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/home/other/jobs/MME-CMPDI_Project_staff_advt_OCT2022.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி : babu@nitt.edu or kumaresh1965@yahoo.co.in
முகவரி: Dr.S.P.Kumaresh Babu, Professor, Dept of MME, NIT, Trichy-15
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nitt.edu/home/other/jobs/MME-CMPDI_Project_staff_advt_OCT2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.