Trichy NIT recruitment 2023 for assistant jobs apply soon, திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! | Indian Express Tamil

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி என்.ஐ.டியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; 31 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
திருச்சி என்.ஐ.டி

திருச்சி என்.ஐ.டியில் இளநிலை, முதுநிலை மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில், திருச்சி என்.ஐ.டி (NIT) வளாகம் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க விரும்பவர்களின் முக்கிய விருப்பம் திருச்சி என்.ஐ.டி ஆகும். தற்போது இந்த முன்னணி கல்வி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், முதுநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2023

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை; 12-ம் வகுப்பு தகுதிக்கு 335 பணியிடங்கள்; அப்ளை பண்ணுங்க!

Junior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 5,200 – 20,200

Senior Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 5,200 – 20,200

Office Attendant/Lab Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 5,200 – 20,200

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruitment.nitt.edu/GroupABC/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruitment.nitt.edu/GroupABC/advt/Group%20C%20Ministerial.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Trichy nit recruitment 2023 for assistant jobs apply soon