மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) விடுதி காப்பாளர், விடுதி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2025
Matron (Female)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Masters degree in Sociology or Psychology or Social Works or public Administration படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
Hostel Manager (Male)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
Hostel Assistant Manager (Male)
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம், அரசு விதிகளின்படி, பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/home/other/jobs/Hostel_Advertisement_TempPost.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chief Warden, Hostel Office, NIT Tiruchirappalli- 620015
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.