/tamil-ie/media/media_files/uploads/2023/07/nit-trichy.jpeg)
திருச்சி என்.ஐ.டியில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2025
Apprentice Trainees
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
Any Graduate - 7
Graduate in Commerce - 3
B.LIS - 5
B.Sc Nursing - 2
Dip. In Civil Engg, - 2
Dip. In EEE - 2
Dip. In Mech. Engg - 4
Dip. In ECE - 1
Dip. In ICE - 1
Dip. In CS, CA - 3
கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: இந்தப் பணியிடங்களில் டிப்ளமோ தகுதி பணியிடங்களுக்கு ரூ.8000 மற்றும் டிகிரி தகுதி பணியிடங்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேடல் பகுதியில் National Institute of Technology, Tiruchirappalli என்ற தேடி, கிடைக்கும் இணைப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.