மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.Sc. (Nursing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,218
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.