/indian-express-tamil/media/media_files/2025/10/10/trichy-pg-trb-aspirants-2025-10-10-11-26-34.jpeg)
முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு எழுதுவோர் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் திருச்சி பிரஸ் கிளப்-ல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு 12.10.25 அன்று முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெறப்போவதாக அரசு அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சி பொறுப்பற்ற பிறகு முதன்முறையாக இந்த முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு மேலும் பொது அறிவு, உளவியல் போன்ற பாடங்களுக்கு மிக ஆழமாகவும் பறந்து விரிந்த பாடத்திட்டமும் தரப்பட்டுள்ளது. ஆகவே அனைத்தையும் படித்து தேர்வு எழுத ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. கால அவகாசம் இல்லாததால் மேற்கண்ட தேர்வை சரியாக எழுத முடியாத சூழ்நிலை உள்ளது. தேர்வு எழுத இருக்கும் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் தற்கொலை செய்யக் கூடிய அளவுக்கு அச்சத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக அரசு மற்றும் கல்வி அதிகாரிகளை பலமுறை அணுகி கோரிக்கையாக தெரிவித்த போதும் இவர்களுக்கு அரசாலும் அரசு அதிகாரிகளாலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தேர்வு சம்பந்தமாக சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடர்ந்து உள்ளோம். மேலும், எங்களின் நியாயமான கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.
எனவே, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்களும் தமிழக முதல்வர் அவர்களும் எங்கள் பிரச்சனை மீது தனிகவனம் செலுத்தி தேர்வை எதிர் நோக்கி காத்திருக்கும் 2 இலட்சம் ஆசிரியர்கள் நலன் கருதி நாங்கள் தேர்வை எழுத 2 மாத கால அவகாசம் வழங்கிட வழிவகை செய்ய வேண்டுகிறோம். இல்லை என்றால் தேர்வை புறக்கணிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்குமா தமிழக அரசு? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.