சாலை ஆய்வாளர் பணிக்கு தேர்வு: திருச்சியில் 3165 பேருக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கு வரும் 7-ம் தேதி தேர்வு நடக்கிறது. இத்தேர்வினை எழுத உள்ள 3,165 பேருக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கு வரும் 7-ம் தேதி தேர்வு நடக்கிறது. இத்தேர்வினை எழுத உள்ள 3,165 பேருக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy: Recruitment for Road Inspector: Call for 3165 candidates Tamil News

Trichy News

க. சண்முகவடிவேல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் வருகின்ற 07-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்திருப்பதாவது:-

Advertisment

திருச்சி மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 3,165 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென 10 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 4 இயங்கு குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் இயங்குவர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 10 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மையங்களிலும் காவல்துறை தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என்றும் கோவிட்-19 நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Nadu Tamil Nadu Jobs Trichy Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: