திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறையில் கடந்த 1997-2000 ஆம் ஆண்டு எம்.சி.ஏ., பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.சி.ஏ. கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. 25 ஆண்டு கால நட்பையும், வளர்ச்சியையும் கொண்டாடும் விதமாக தங்களுக்கு கற்ப்பித்த பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினருக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாங்கள் பயின்ற கல்லூரியின் வகுப்பறையில் அமர்ந்து கேக் வெட்டி சக மாணவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் மரியதாஸ் முன்னாள் மாணவர்களை வரவேற்றும் பேசினார்.
/indian-express-tamil/media/post_attachments/91467311-fb0.jpg)
இந்நிகழ்வில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்கள் கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்டு, தங்களுக்குள் இருந்த நட்பை புதுப்பித்துக் கொண்டதோடு, தங்களின் வகுப்பு ஆசிரியராக இருந்த பேராசிரியர் அ.சார்லஸ் என்பவரை முன்னாள் மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
மேலும் தாங்கள் பயின்ற துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரூ.1 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளை ஒன்றை துவக்கி அதற்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். இந்த அறக்கட்டளை மூலம் துறை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிகள் வழங்கப்படும் என்று முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், தொழில்துறை வளர்ச்சி குறித்து மாணவர்களுடனான சொற்பொழிவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பிரிட்டோ ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெக்ஸ் சிரில் ஆகியோர் செய்திருந்தனர்.
க.சண்முகவடிவேல்