தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவ படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தமிழ்நாட்டில் மூன்று வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றிருக்கிறது. அதில், பி.இ., பி.டெக், போன்ற பொறியியல் படிப்புகள், பாரா மெடிக்கல் எனப்படும் 17 வகையான துணை மருத்துவ படிப்புகள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்த்துள்ளன.
இந்த விண்ணப்பங்களில், பொறியியல் படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் கோர்க்கை வைத்துள்ளன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவ படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதியதாக மாற்றி அமைக்கப்படும் புதிய கல்விக் கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடைமுறைக்கு வரும் புதிய கல்விக் கட்டணம் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“