சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றிய பகுதியில் உள்ளது கமலை கிராம். 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்த விஜயா - பெரியசாமி இவர்களுடைய மகன் நாகராஜ். பீர்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை படித்தார். பள்ளியில் ஆசிரியர்கள் நீட் தேர்வு சிறப்பு பயிற்சி அளித்தனர்.
இந்தாண்டு நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் 435 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அமராவதி உழவர் பயிற்சி மையத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்று தங்கி பயிற்சி பெற்றார். தொடர்ந்து நடந்த முடிந்த நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 136 மதிப்பெண் எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
மேலும், இதே கமலை கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி உடையப்பன் - காளியம்மாள் தம்பதியின் மகன் ரவி (18) 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே புற்று நோயால் தாயை இழந்த நிலையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் அரசு பள்ளியில் படித்து நடந்து முடிந்த நீட் தேர்வில் 592 மதிப்பெண் எடுத்து அரசு பள்ளிக்கான 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“