புதுச்சேரி நீதித் துறையில் காலியாக உள்ள சிவில், மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பில், 2 ஆண்டுகள் தளர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுச்சேரி அரசின் நீதித் துறையில், பின்னடைவு காலியிடம் உள்பட, 19 சிவில் நீதிபதி பதவிகளுக்கும், ஒரு மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தேர்வு அறிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டது.
சிவில் நீதிபதி பதவிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதியும், மாவட்ட நீதிபதிக்கு ஏப்ரல் 8ம் தேதியும் விண்ணபிக்க கடைசி நாள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆன்லையன் மூலம் விண்ணபிக்கும் கடைசி தேதியை, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவில் மாவட்ட நீதிபதிகளுக்கு வயது வரம்பு தளத்தப்பட்டுள்ளது.
45 ஆக இருந்த வயதின் உச்சவரம்பு 47 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.