Advertisment

3% இட ஒதுக்கீடு; 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: உதயநிதி சொன்ன புதிய தகவல்

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கோரப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Udhayanidhi Stalin on 3 percentage sports quota reservation 100 players govt job Tamil News

"தென் மாவட்டங்கள் என்றால் வீரத்திற்கும் வீர விளையாட்டிற்கும் தலைசிறந்தவர்களாக உள்ளார்கள். பட்டிதொட்டி எங்கும் விளையாட்டு வீரர்களை உருவாகும் நோக்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது." என்று உதயநிதி கூறினார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கு விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Advertisment

இதில் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தனது துறையின் கீழ் 450 ஊராட்சிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 85 மதிப்பிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களையும்,தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 2111 வீரர்களுக்கு ரூ 43 லட்சம் மதிப்பிலான பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். 

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 45 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாவும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுய தொழில் புரிய வங்கிக்கடன் மானியம்,ஆவின் விற்பனை நிலையம்,மூன்று சக்கர வாகனம் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தமிழகத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.86 கோடி மதிப்பீட்டில் 12,525 கிராமங்களுக்கு வழங்க இருக்கிறது. இதுவரை 18 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

தென் மாவட்டங்கள் என்றால் வீரத்திற்கும் வீர விளையாட்டிற்கும் தலைசிறந்தவர்களாக உள்ளார்கள். பட்டிதொட்டி எங்கும் விளையாட்டு வீரர்களை உருவாகும் நோக்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான நிதி 
80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு இப்போட்டிகளில் 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நடப்பாண்டு 11 லட்சத்து 56 பேர் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் இப்போட்டிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. 

சுகாதாரம்,பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலை உள்ள மாநிலமாகவும் அதிக வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் புள்ளி விவரம்  மூலம் தெரியவந்துள்ளது. யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கோரப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக  100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்" என்று அவர் கூறினார். 

செய்தி: சக்தி சரவணன் - மதுரை 

Tamil Nadu Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment