கடந்த ஜூன் 19-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற, யு.ஜி.சி நெட் 2024 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளுடன் பாடவாரியாக கட்ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் யுஜிசி தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. நாடு முழுவதும் 1205 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, 9.08 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வின் இறுதி விடைக்குறிப்பு கடந்த வாரம் வெளியானதை தொடர்ந்து, இன்று (அக்டோபர் 17) தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது யுஜிசி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர்கள், ஜே.ஆர்.ஃப், மற்றும் பி.எச்.டி சேர்க்கைக்காக 83 பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இந்த யுஜிசி தேர்வு தேசிய தேர்வு முகமையினால் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ந் தேதி இந்த தேர்வு நடத்தப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிந்ததால், நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி ரத்து செய்யப்பட்ட நெட் தேர்வு நடைபெற்றது.
தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக செப்டம்பர் 4-ந் தேதியுடன் முடிக்க இருந்த இந்த தேர்வு ஒரு நாள் தாமதமாக செப்டம்பர் 5-ந் தேதி முடிக்கப்பட்டது. தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு இறுதி விடைக்குறிப்புக்ள வெளியானதை தொடர்ந்து, தற்போது யுஜிசி தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 83 பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் கட்அப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது, https://ugcnet.ntaonline.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“