தொடர்ச்சியான தொற்றுநோய்களுக்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவ கொரோனா பணிக்குழு மற்றும் ஹெல்ப்லைன்களை உருவாக்க அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு திங்கள்கிழமை அன்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், கிருமிநாசினி பயன்பாடு, முகக்கவசம் அணிவது, சோப்புக் கொண்டு கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
COVID-19 காரணமாக ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையை உயர் கல்வி நிறுவனங்கள் உணர்வுப்பூர்வமாக கையாள வேண்டும் என்று ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. "தற்போதைய காலங்களில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் பின்வருமாறு - மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் மனநலம் போன்ற பிரச்சனைகளுக்கு மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று யூஜிசி அறிவித்துள்ளது.
என்.எஸ்.எஸ்., என்.சி.சி உள்ளிட்ட வாழ்க்கைத் திறன்களில் நன்கு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் குழுக்களை உருவாக்க உயர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்றவர்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களும் உடல் மற்றும் மன ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் பல சவால்களை எதிர்கொள்வதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க கூட்டாக பணியாற்ற வேண்டும். , ”என்றும் யூஜிசி கூறியுள்ளது.
மே 2021 இல் எந்தவொரு ஆஃப்லைன் தேர்வுகளையும் நடத்த வேண்டாம் என்று யுஜிசி முன்னர் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிடமும் (எச்இஐ) கேட்டுக் கொண்டது. இந்த அறிவிப்பு தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதற்கான உள்ளூர் நிலைமைகளை மதிப்பீடு செய்ய உயர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil