/indian-express-tamil/media/media_files/fUMfB602xxpfKL5nd7oy.jpg)
கடந்த ஆண்டு எம்.ஃபில் படிப்பை நிறுத்துவதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. எம்.ஃபில் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) எம்.ஃபில் (MPhil) படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு பல்கலைக்கழகங்களை கேட்டுக் கொண்டுள்ளது. எம்.ஃபில் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல என்றும், எனவே எம்.ஃபில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என்றும் யூ.ஜி.சி கூறியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: UGC asks universities to discontinue MPhil admission, says it is not a recognised degree
ஒரு சில பல்கலைக்கழகங்கள் எம்.ஃபில் படிப்புகளில் சேர புதிய விண்ணப்பங்களை வெளியிட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு கண்டறிந்ததை அடுத்து UGC இன் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“ஒரு சில பல்கலைக்கழகங்கள் எம்.ஃபில் (முதுநிலை தத்துவம்) படிப்பிற்கு புதிய விண்ணப்பங்களை அழைப்பது UGC-யின் கவனத்திற்கு வந்துள்ளது. இது சம்பந்தமாக, எம்.ஃபில் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல என்பதை கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்” என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியது.
கடந்த ஆண்டு எம்.ஃபில் படிப்பை நிறுத்துவதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. நவம்பர் 7, 2022 அன்று, பல்கலைக்கழக மானியக் குழு (பி.எச்.டி பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறைகள்) விதிமுறைகளை யு.ஜி.சி உருவாக்கியது. திருத்தப்பட்ட பி.எச்.டி தகுதி அளவுகோல்களின்படி, குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தரத்துடன் நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் பி.எச்.டிக்கு தகுதி பெறுவார்கள்.
“எனவே, 2023-24 கல்வியாண்டுக்கான எம்.ஃபில் படிப்பிற்கான சேர்க்கையை நிறுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மாணவர்கள் எம்.ஃபில் படிப்பில் சேர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.