பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்ட இரண்டு நிபுணர் குழுக்கள் சமர்ப்பித்த பரிந்துரைகளை அனைத்தையும் விவாதிக்க பல்கலைக்கழக மானியக் குழு ஆணையம் (யுஜிசி) நேற்று விவாதித்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக கடந்த மார்ச் 16ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
Advertisment
2020-21 ஆம் ஆண்டிற்கான கல்வி அட்டவணையும் ஆன்லைன் கற்றலை ஊக்குவிப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்க,யுஜிசி இந்த மாதத்தில் இரண்டு குழுக்களை அமைத்தது.
2020-21 ஆம் ஆண்டிற்கான கல்வி அட்டவணை தொடர்பாக, ஆர்.சி குஹாத் தலைமையிலான பரிந்துரை குழு, இளங்கலை மற்றும் முதுகலை அளவில் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்த பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது.
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், பலவகையான நுழைவுத் தேர்வுகள் எழுதுவதற்கு பதிலாக, ஒற்றை பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம். இதன் மூலம், தேர்வு மையங்களுக்கு செல்வதில் வேட்பாளர்கள் சந்திக்கும் சிரமத்தை குறைக்க முடியும் என்று அறிக்கை கூறுகிறது.
Advertisment
Advertisements
முன்மொழியப்பட்ட இந்த பொது நுழைவுத் தேர்வு, தொழில்முறை படிப்புகளுக்கு பொருந்தாது. ஏனெனில், இதற்கான பொது நுழைவுத் தேர்வுகள் ஏற்கனவே தேசிய மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்த நுழைவுத் தேர்வு குறித்த எந்த முடிவையும் பல்கலைக்கழக மானியக் குழு நேற்று மாலை வரை எடுக்கவில்லை.
"நாங்கள் எதையும் கட்டாயமாக்க முடியாது. மாணவர்களின் நலனுக்காக முடிந்தவரை பல்வேறு கல்வித் திட்டங்களுக்கான ஒரு பொது நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கு அணைத்து கல்வி நிறுவனங்களும் ஒன்றினைந்து செயல்படுங்கள் என்று அறிவுறுத்தலாம், ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத யுஜிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், வரும் கல்வியாண்டை ஜூலைக்கு பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் என்ற குழுவின் பரிந்துரையை யுஜிசி ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தை கோடை விடுமுறையாக கருத வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.
நிலுவையில் உள்ளஇறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான “ வழிகாட்டுதல்களும், 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்வி அட்டவணை குறித்த செய்தி குறிப்பை நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் / உயர்க் கல்வி நிறுவனங்கள் உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி வருடாந்திர அட்டவணையில் மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கபபடுவார்கள்.