பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தொழிற்பயிற்சியுடன் கூடிய பட்டப்படிப்புகளுக்கான வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை அழைத்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க, ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் இளங்கலைப் படிப்பில் சேர்க்கைப் பெறும் மாணவர், பட்டப்படிப்பின் ஒருங்கிணைந்த அங்கமாக தொழிற்பயிற்சிப் பயிற்சியைத் தொடர்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: UGC draft guidelines released for apprenticeship embedded degree programmes
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில், வெளியீட்டுத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கிடைக்கும் கூகுள் (Google) படிவத்தின் மூலம் வழிகாட்டுதல்கள் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிருமாறு பங்குதாரர்களை யு.ஜி.சி கேட்டுக் கொண்டது.
யு.ஜி.சி., அறிவிப்பின்படி, 'வகுப்பில் என்ன கற்பிக்கப்படுகிறது' மற்றும் 'தொழில்துறைக்கு என்ன தேவை' என்பதற்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியது. “கல்வி- வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைக்கும் வகையில் தொழில்துறைக்குத் தேவையான திறன்கள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இந்த இடைவெளியைக் குறைப்பதில் தொழிற்பயிற்சிக்கு கணிசமான பங்கு உண்டு” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சியுடன் கூடிய பட்டப்படிப்புகளுக்கான விதிகள்
- ஒரு நிறுவனம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கு தகுதியுடையவர்கள் என்றும், 30 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட ஸ்தாபனத்தின் மூலம் பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவது கட்டாயம் என்றும் அறிவிப்பு கூறுகிறது.
- ஒரு நிதியாண்டிற்குள், ஒவ்வொரு நிறுவனமும் 2.5 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையிலான பயிற்சியாளர்களை ஈடுபடுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் உட்பட நிறுவனத்தின் மொத்த வலிமை, மொத்தத்தில் குறைந்தபட்சம் 5 சதவிகிதத்திற்கு உட்பட்டு புதிய பயிற்சியாளர்கள் மற்றும் திறன் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- அந்தந்த பிராந்தியங்களில் தொழிற்பயிற்சிக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சென்னை, கான்பூர், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்திய அரசாங்கத்தால் பயிற்சி அல்லது நடைமுறைப் பயிற்சிக்கான பிராந்திய வாரியங்களை "தன்னாட்சி அமைப்புகளாக" நிறுவ வேண்டும் என்றும் அறிவிப்பு குறிப்பிடுகிறது.
திட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பங்குதாரர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.