இறுதி கல்வியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைக்கப்போவதில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்தது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், " செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான் தேர்வுகள் நடத்தி முடிக்கவும், மாற்று கல்விஆண்டு தொடர்பான நெறிமுறைகளை விரைவில் வெளியிடவும்" முடிவு செய்யப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தங்களின் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது பிற வழிகளின் மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தப்படும்.
முன்னதாக, பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி ஆண்டு தொடர்பாக வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. அதில், கொரோனா பெருந்தொற்று நிலைமை இயல்பாக காணப்படும் மாநிலங்களில், இடைநிலை மற்றும் இறுதியாண்டு மான்வகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 தேதிகளில் நடத்தப்படும் என்றும், மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒரு கோவிட்-19 குழு அமைக்கப்பட்டு, கல்வி ஆண்டு செயல்பாடுகள் மற்றும் தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
" செப்டம்பர் மாதம் நடக்கும் செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு, சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்”என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யுஜிசி விரைவில் இது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மத்திய உயர்கல்வித் துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், 'இறுதி கல்வியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும்'என்று கூறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.