செமஸ்டர் தேர்வு மற்றும் கல்வி அட்டவணை: யுஜிசி அறிவுரைகள் என்னென்ன?

ஒருவேளை, ஆண்டின்-இறுதி செமஸ்டர்  தேர்வை நடத்த முடியாவிட்டால், உள் மதிப்பீடு (50 சதவீத வெயிட்டேஜ்) மற்றும் முந்தைய செமஸ்டர் செயல்திறன் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கலாம் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உயர்க்கல்வி நிறுவனங்களுக்கான உத்தேச கல்வி  அட்டவணையை  பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நேற்று வெளியிட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதியும், புதிய சேர்க்கை செயல்முறை  ஆகஸ்ட் மாதத்திலும், இடைப்பட்ட (2 அல்லது 3 ஆம் ஆண்டு ) மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியும் தொடங்கலாம் என்று அந்த அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்டது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்கள் ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்தி, தேர்வு முடிவுகளை அந்த மாத இறுதியில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை நடத்தி, தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் அறிவிக்கலாம்.

ஜூன் மாதம் முழுவதையும் கோடை விடுமுறையாக கருதலாம் என்று யுஜிசி கல்வி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பரிந்துரைக்கப்பட்ட கல்வி அட்டவணையில் கால சூழலுக்கு ஏற்ப  பல்கலைக்கழகங்கள்/உயர்க்கல்வி நிறுவனங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வை ஆஃப்லைன் (அ) ஆன்லைன் முறையில் நடத்தலாம், தேர்வு நேரத்தை மூன்று முதல் இரண்டு மணி நேரமாக குறைத்துக் கொள்ளலாம் என்று யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது. எவ்வாறாயினும், சமூக விலகல் வழிகாட்டுதல்களுடன், மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு  நியாயமான வாய்ப்பை உறுதிசெய்யும் வழியில் தேர்வை நடத்தப்பட  வேண்டும்”என்று  குறிப்பிட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணத்தால் ஆண்டின்-இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், உள் மதிப்பீடு (50 சதவீத வெயிட்டேஜ்) மற்றும் முந்தைய செமஸ்டர்  செயல்திறன் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கலாம் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“முந்தைய செமஸ்டர் அல்லது முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் கிடைக்காத சூழ்நிலைகளில், 100% மதிப்பீடும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் இருக்கலாம். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் மேம்படுத்த விரும்பினால், அடுத்த செமஸ்டரில் இந்த பாடங்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளில் தோன்றலாம் ”என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு, வீடியோ கான்பரன்சிங் மூலம் நேர்காணல் தேர்வுகள் (viva-voce) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஃபில் மற்றும் பிஎச்டி மாணவர்களுக்கும் ஆறு மாத கால நீட்டிப்பு கொடுக்கப்படுகிறது .

பெருந்த்தொற்று  நாட்களில் அனைத்து  வகையான மாணவர்களும் கல்லூரியில் “கலந்துகொள்ளப்பட்டதாக கருதப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2020-21 கல்வி ஆண்டின் முதல் செமஸ்டர் தேர்வு 2021 ஜனவரியிலும், இரண்டாவது செமஸ்டர் மே-ஜூன் மாதங்களிலும் நடைபெறும். 2021-22 கல்வியாண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ugc guidelines on examinations and academic calendar for the universities in view of coronavirus lockdown

Next Story
10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வு : மீதமுள்ள தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ மும்முரம்cbse class 10 sample question paper, cbse English 10th question paper, cbse English test syllabus, cbse, cbse.nic.in
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com