Advertisment

கட்டணம், உதவித்தொகை உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடவும்; பல்கலை.களுக்கு யு.ஜி.சி அறிவுறுத்தல்

கல்விக் கட்டணம், உதவித்தொகை உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடவும்; பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி அறிவுறுத்தல்

author-image
WebDesk
New Update
ugc

பல்கலைக்கழக மானியக் குழு

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டண விவரங்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கை, விடுதி வசதிகள், உதவித்தொகை, தரவரிசை மற்றும் அங்கீகாரம் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரியாக வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: UGC instructs universities to disclose fee, scholarship, other details on official websites

பல பல்கலைக்கழகங்களில் சரியான இணையதளம் இல்லை என்பதை யு.ஜி.சி கண்டறிந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"உயர்கல்வி அமைப்பில் உள்ள பல்வேறு பங்குதாரர்கள், வருங்கால மாணவர்கள், பெற்றோர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள்/ உயர் கல்வி நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து சில அடிப்படைத் தகவல்களைப் பெற பெரிதும் விரும்புகின்றனர்.”

பல பல்கலைக்கழகங்களின் இணையதளங்கள் அவற்றின் பல்கலைக்கழகம் தொடர்பான அடிப்படை குறைந்தபட்ச தகவல்களை வழங்குவதில் குறைபாடுள்ளதோடு மட்டுமல்லாமல், பல நேரங்களில் அவற்றின் இணையதளங்கள் செயல்படாமலும் புதுப்பிக்கப்படாமலும் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது பங்குதாரர்களுக்கு நிறைய சிரமங்களையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020ன் மூன்றாம் ஆண்டை நாம் கொண்டாடும் இந்த முக்கியமான தருணத்தில், பல்கலைக்கழகங்கள் தங்கள் இணையதளத்தில் அடிப்படை குறைந்தபட்ச தகவல்களையும் புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தையும் வழங்க வேண்டியது விவேகமானதாக இருக்கும். இந்த தகவல்களின் சரிபார்ப்பு பட்டியலை பல்கலைக்கழகங்கள் தங்கள் இணையதளங்களில் வழங்குவதற்காக நாங்கள் தயார் செய்துள்ளோம்," என்று யு.ஜி.சி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் கூறினார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, உயர்கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் சேர்க்கை மற்றும் கட்டணம் தொடர்பான கீழ்கண்ட விவரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும்: ப்ராஸ்பெக்டஸ் (இணைப்பு வழங்கவும் மற்றும் ப்ராஸ்பெக்டஸின் மென் நகலை பதிவேற்றவும்), சேர்க்கை (இணைப்பு வழங்கவும்), சர்வதேச மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டுதல்கள் (பொருந்தக்கூடிய இடங்களில்), கட்டணம் பல்வேறு திட்டங்களுக்கான கட்டமைப்பு, கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கை.

கல்வி தொடர்பாக, கீழ்கண்ட விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்: கல்வித் திட்டம், கல்வி நாட்காட்டி, பள்ளிகள்/ துறைகள்/ மையங்கள், துறை/பள்ளி/மைய வாரியாக ஆசிரியர் விவரங்கள் புகைப்படங்களுடன், நூலகம் - அடிப்படைத் தகவல்.

உதவித்தொகை/ பெல்லோஷிப் விவரங்கள், ஏ.பி.சி போர்டல் பற்றிய தகவல்கள், மாணவர் குறை தீர்க்கும் குழு, ராகிங் எதிர்ப்பு செல் மற்றும் ஹெல்ப்லைன் எண், முன்னாள் மாணவர்களின் தகவல், வேலை வாய்ப்புகள் மற்றும் பலவற்றை வழங்குவது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமாகும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு UGC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது — ugc.gov.in.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ugc University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment