கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு குறித்த முழு விபரமும் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு நடைபெறும் நாள், நேரம், அட்டவணை குறித்த அனைத்து விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அந்தவகையில் கடந்த ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது இந்த தேர்வானது முதல் தேசிய தேர்வு முகமை எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் நடத்த உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் உதவிப்பேராசியர்களுக்கான தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்ற முறை நடந்த நெட் தேர்வில் 8 லட்சம் உதவி பேராசிரியர்கள் பணி நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இம்முறை இந்த தேர்வு எழுத பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வு முதன்முறையாக ஆன்லைனின் நடத்தப்படுவது கூடுதல் தகவல். ’நெட்’ தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 2018 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
UGC NET Exam 2018, How to Download Admit Card :தேர்வு விபரங்கள்!
நெட் தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மும்முரமாக தேர்வுக்கு தயாராகுங்கள். தேர்வுக்கான அட்மிட் கார்டை ntanet.nic.in, இணையதளத்தில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
தேர்வு அட்டவணை:
டிசம்பர் 18, 2018 : 9:30 AM to 1 PM
டிசம்பர் 19, 2018 : 9:30 AM to 1 PM
டிசம்பர்20, 2018 : 9:30 AM to 1 PM
டிசம்பர் 21, 2018 : 9:30 AM to 1 PM
டிசம்பர் 22, 2018: 9:30 AM to 1 PM