தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு சுழற்சி தேர்வுகளுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ugcnet.nta.nic.in அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாக, யுஜிசி நெட் தேர்வு ஆண்டிற்கு 2 முறை நடத்தப்படும். ஆனால், இந்த முறை, கோவிட் தொற்றுநோய் காரணமாக தேர்வின் அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு சுழற்சி தேர்வுகளையும் நடத்த யுஜிசி முடிவு செய்துள்ளது.
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை
Step 1: முதலில் யுஜிசியின் ntanet.nic.in அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: அதில், ‘UGC NET December 2021/June 2022 registration’கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: நீங்கள் புதிய பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்
Step 4: அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு, ரெஜிஸ்டர் கொடுக்க வேண்டும்.
Step 5: பின்னர், புதிதாக கிரியேட் செய்யப்பட்ட ரெஜிஸ்டர் நம்பரை உபேயாகித்து லாகின் செய்ய வேண்டும்.
Step 6: படிவத்தை நிரப்பி, படத்தை பதிவேற்றி, டவுன்லோடு கொடுக்க வேண்டும்.
Step 7: கட்டணம் செலுத்த வேண்டும்
விண்ணப்பத்தாரர்கள், ஏப்ரல் 30 முதல் மே 30 ஆம் தேதி 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதே சமயம், மே 20 ஆம் தேதி இரவு 11:50 மணி வரை தான், விண்ணப்பதாரர்கள் எந்தவித தாமத கட்டணமும் இன்றி பணம் செலுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட நெட் தேர்வு விண்ணப்பங்களில், மே 21 முதல் 23க்குள் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UGC-NET டிசம்பர் 2021 & ஜூன் 2022 சுழற்சிகள் இரண்டின் JRF இடங்களும் இணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பாட வாரியாக மற்றும் வகை வாரியாக JRF ஒதுக்கீடு முறை மாறாமல் உள்ளது” என என்டிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நெட் தேர்வானது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் அல்லது இரண்டிற்கும் ஆட்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு ஆண்டும் UGC ஆல் நடத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil